2013-01-05 15:16:08

2012ம் ஆண்டில் பாப்பிறையின் பிறரன்பு நிறுவனத்தின் உதவிகள்


சன.05,2013. இருபது கடும் சண்டைகள் உட்பட 388 ஆயுதம் தாங்கிய மோதல்கள் மற்றும் 79 மனிதாபிமான நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், உதவி உடனடியாகத் தேவைப்பட்ட 41 விண்ணப்பங்களுக்கும் 2012ம் ஆண்டில் “Cor Unum” என்ற பாப்பிறையின் பிறரன்பு நிறுவனம் உதவியுள்ளது.
“Cor Unum” பிறரன்பு நிறுவனத்தின் 2012ம் ஆண்டின் பணிகள் குறித்து லொசர்வாத்தோரே ரொமானோ தினத்தாளுக்குப் பேட்டியளித்த அந்நிறுவனத்தின் செயலர் பேரருள்திரு Giampietro Dal Toso இவ்வாறு தெரிவித்தார்.
சிரியா, லிபியா, பங்களாதேஷ், தென் சூடான், பொலிவியா, பரகுவாய் ஆகிய நாடுகளுக்கு Cor Unum” பிறரன்பு நிறுவனத்தின் உதவிகள் கடந்த ஆண்டில் அதிகம் தேவைப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.