2013-01-03 15:12:10

சிரியாவில் நிகழ்ந்துவரும் போராட்டங்களில் இதுவரை 60,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் - ஐ.நா. அறிக்கை


சன.03,2013. 2011ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் சிரியாவில் நிகழ்ந்துவரும் போராட்டங்களில் இதுவரை 60,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐ.நா. அறிக்கை ஒன்று கூறுகிறது.
ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்டுள்ள இவ்வறிக்கையின்படி, கொல்லப்பட்டவர்களில் 76 விழுக்காட்டினர் ஆண்கள் என்றும், 7.5 விழுக்காட்டினர் பெண்கள் என்றும் தெரிகிறது.
Benetech என்ற ஆய்வு மையம் மேற்கொண்ட கணக்கின்படி, 2012ம் ஆண்டு நவம்பர் மாதம் முடிய சிரியாவில் 59,648 பேர் இறந்துள்ளனர். எனினும், அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, 45,000 பேரே இறந்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது.
Damascus நகர் பகுதியிலும், Homs பகுதியிலும் தான் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இந்த மரணங்களுக்கு அரசும், புரட்சிக் குழுக்களும் பொறுப்பேற்கவேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் நவி பிள்ளை கூறினார்.








All the contents on this site are copyrighted ©.