2013-01-02 15:47:07

தூசிகளையும், ஈரப்பதத்தையும் நீக்குவதற்கு Sistine சிற்றாலயத்தில் புதிய கருவிகள் புத்தாண்டில் பொருத்தப்பட உள்ளன


சன.02,2013. வத்திக்கானில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற Sistine சிற்றாலயத்தில் உருவாகும் தூசிகளையும், ஈரப்பதத்தையும் நீக்குவதற்கு புதிய கருவிகள் புத்தாண்டில் பொருத்தப்பட உள்ளன.
இச்சிற்றாலயத்தை ஒவ்வோர் ஆண்டும் 50 இலட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பார்வையிட வருவதால், அங்கு உருவாகும் தூசி மற்றும் அவர்களின் மூச்சுக் காற்றின் ஈரப்பதம் அக்கோவிலில் அமைந்துள்ள ஒவியங்களைச் சிதைக்கும் ஆபத்து உள்ளதென்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட உள்ளது என்று வத்திக்கான் அருங்காட்சியகத்தின் இயக்குனர் Antonio Paolucci கூறினார்.
பயணிகள் வரும்பாதையில் 300 அடிக்கும் நீளமான ஒரு கம்பளம் தற்போது விரிக்கப்பட்டு, பயணிகளின் காலணிகளில் உள்ள தூசிகளைக் குறைக்கும் வழிகள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
உலகப் புகழ்பெற்ற மிக்கேலாஞ்சலோவின் ஓவியங்கள் அடங்கிய Sistine சிற்றாலயம் 1512ம் ஆண்டு திறக்கப்பட்டது என்பதும், 2012ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இவ்வாலயத்தின் 500ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.