2012-12-31 10:24:49

கவிதைக் கனவுகள்... வெற்றி நமதே! – தமிழ் நேசன்


தொடுத்த நற்செயல் துலங்கிட எண்ணி
துணிந்திட்ட வேளை தடைபல காண்பின்
தடுத்த சக்தியை தலையிடா தொழித்தால்
எடுத்த அனைத்திலும் வெற்றி நமதே!

அடுத்து அடுத்து ஆயிரம் வரலாம்!
அஞ்சிட வேண்டாம், அறத்தில் நிலைப்போம்!
உடுத்தும் கரங்கள் உணர்வில் நமது
உள்ளத் துடிப்பில் வெற்றி நமதே!

தொல்லைகள் வரலாம்; தொடரல் தகாது
தொல்லையில் இறைவன் புகலிடம் தேடினால்
தொல்லையும் ஒழிய துயரமும் மறையும்
வல்லவன் அருளால் வெற்றி நமதே!








All the contents on this site are copyrighted ©.