2012-12-29 14:33:20

கவிதைக்கனவுகள் - இறுதி மணித் (மணல்) துளிகள்


இவ்வாண்டின் இறுதி மணித்துளிகள்,
இறுதி மணல் துகள்கள்...
இரு குடுவைகள் கொண்ட
2012 என்ற காலக்கடிகாரத்தின்
மேல் குடுவையில் மீதமுள்ள
இறுதி மணல் துளிகள்...

கீழ்குடுவையில் உள்ள துகள்கள்
அங்கேயேத் தங்கிவிடாது.
காலக்கடிகாரம் பரட்டப்படும்போது
2013 என்ற பெயருடன்
கீழ்குடுவை மேலும், மேல்குடுவை கீழுமாய்...
காலம் தொடரும்...

கீழ்நோக்கி விழுவதெல்லாம்
வீழ்ச்சி அல்ல...
அருவியில் நீர் வீழ்வது
வீழ்ச்சி அல்ல, வெற்றியே...
காலம் என்ற மணல் துகள்கள்
வீழ்வதும் இதுபோலவே!








All the contents on this site are copyrighted ©.