2012-12-29 15:10:53

அருள்தந்தை லொம்பார்தியின் ஆசிரியர் பகுதி


டிச.29,2012. கிறிஸ்மஸ் பெருவிழாவன்று முடிவின்றி இரத்தம் சிந்துதல் இடம்பெறும் சிரியா உட்பட உலக நாடுகளின் அமைதிக்கு அழைப்பு விடுத்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், சீனாவின் புதிய தலைவர்களுக்கும் வெளிப்படையாகத் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்திருப்பது திருஅவை மனுக்குலத்தின் பாதையை எவ்வாறு கவனித்து வருகிறது என்பதைக் காட்டுகின்றது என்று இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.
வத்திக்கான் வானொலி மற்றும் தொலைக்காட்சிக்கு வழங்கிய வாரச் செய்தியில், திருத்தந்தை தனது ஊர்பி எத் ஓர்பி செய்தியில் சீனாவுக்கு வழங்கிய நல்வாழ்த்துக்கள் குறித்த சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார் திருப்பீடப் பேச்சாளர் அருள்தந்தை லொம்பார்தி.
மனித சமுதாயத்தில் ஐந்தில் ஒரு பகுதி மக்கள் தொகையைக் கொண்டுள்ள சீனா உலகின் அதிகாரச் சக்தியில் வளர்ந்து வருகின்றது என்றும், அந்நாட்டின் புதிய தலைமை, வழக்கமான அதிகாரக் கண்ணோட்டத்தோடு செயல்படாமல் அமைதி மற்றும் ஒருமைப்பாட்டுணர்வில் செயல்படுமாறும் கேட்டுக்கொண்டார் அருள்தந்தை லொம்பார்தி.







All the contents on this site are copyrighted ©.