2012-12-28 11:08:06

நாற்பதாயிரம் ஐரோப்பிய இளையோர் திருத்தந்தையுடன் செபம்


டிச.28,2012. பிரான்ஸ் நாட்டின் டேஜே கிறிஸ்தவ ஒன்றிப்புத் துறவு சபையினர் நடத்தும் ஐரோப்பிய இளையோர் மாநாடு இவ்வெள்ளிக்கிழமையன்று உரோமையில் தொடங்கியுள்ளது.
ஏறக்குறைய நாற்பதாயிரம் இளையோர் கலந்து கொள்ளும் இம்மாநாட்டின் ஒரு நிகழ்வாக, இவ்விளையோர் இச்சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் திருத்தந்தையைச் சந்தித்து அவருடன் சேர்ந்து செபம் செய்வார்கள்.
வருகிற சனவரி 2ம் தேதிவரை நடைபெறவிருக்கும் இந்த 35வது டேஜே இளையோர் மாநாட்டில் கலந்து கொள்ளும் இவ்விளையோருக்கு உரோம் பங்குத்தளங்களும் குடும்பங்களும் வரவேற்பு கொடுத்துள்ளன.
பிரிந்த கிறிஸ்தவ சபையைச் சேர்ந்த அருள்சகோதரர் Roger Schutz என்பவரால் 1940ம் ஆண்டு Taizé கிறிஸ்தவ ஒன்றிப்பு துறவு சபை உருவாக்கப்பட்டது. இதில் கத்தோலிக்கர் உட்பட பல கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்த ஏறக்குறைய நூறு பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.