2012-12-28 11:01:46

இந்தியாவில் பாலியல் வன்கொடுமைச் சட்டம் மறுபரிசீலனை


டிச.28,2012. புதுடெல்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர், கொடூரக் கும்பல் ஒன்றால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியதை முன்னிட்டு இடம்பெற்ற நாடு தழுவிய கடும் போராட்டங்களினால், பாலியல் வன்கொடுமைச் சட்டத்தை மறுபரிசீலனை செய்வதற்கு மூன்று பேர் அடங்கிய குழுவை உருவாக்கியுள்ளது மத்திய அரசு.
இந்தப் பரிசீலனை குழு வருகிற சனவரியில் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும். இந்தியக் குற்றவியல் சட்டத்தின்படி தற்போது இத்தகைய குற்றவாளிகளுக்கு குறைந்தது ஏழாண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது.
இந்தியாவில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக 1971ம் ஆண்டில் 2,487 பேர் வழக்குப் பதிவு செய்தனர், அவ்வெண்ணிக்கை 2011ம் ஆண்டில் 24,206 ஆக உயர்ந்துள்ளது என தேசியக் குற்றப்பதிவு அலுவலகம் கூறியுள்ளது.







All the contents on this site are copyrighted ©.