2012-12-28 11:06:30

2012ம் ஆண்டில் ஒரு இலட்சத்து ஐந்தாயிரம் கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்


டிச.28,2012. 2012ம் ஆண்டில் ஒரு இலட்சத்து ஐந்தாயிரம் கிறிஸ்தவர்கள் தங்களது விசுவாசத்திற்காகக் கொல்லப்பட்டுள்ளனர், அதாவது ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கு ஒருவர் வீதம் கொல்லப்பட்டுள்ளனர் என்று சமய சுதந்திரத்தைக் கண்காணிக்கும் இத்தாலிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் Massimo Introvigne கூறினார்.
இசுலாமிய அடிப்படைவாதக் குழுக்கள் தீவிரமாகச் செயல்படும் இடங்களில் கிறிஸ்தவர்கள் அதிகமாகக் கொல்லப்படுகின்றனர் என்றுரைத்த Introvigne, இதற்கு எடுத்துக்காட்டாக, நைஜீரியா, பாகிஸ்தான், எகிப்து, மாலி, சொமாலியா போன்ற நாடுகளைக் குறிப்பிட்டுப் பேசினார்.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் போக்கோ ஹாராம் என்ற இசுலாமியத் தீவிர அமைப்பின் வன்முறையால் திருப்பலிக்குக்கூடச் செல்ல முடியாத அளவுக்குக் கிறிஸ்தவர்கள் கொல்லப்படுவதையும் அவர் விளக்கினார்.
கம்யூனிச சர்வாதிகாரம் இன்னும் இடம்பெறும் வட கொரியா போன்ற நாடுகளிலும் கிறிஸ்தவர்கள் அதிகமாகத் துன்புறுகின்றனர் என்றும் Introvigne தெரிவித்தார்.
2012ம் ஆண்டில் தங்களது விசுவாசத்திற்காகக் கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டது குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த Introvigne, இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் கந்தமால் பகுதியையும் குறிப்பிட்டார்







All the contents on this site are copyrighted ©.