2012-12-27 15:19:14

சீனப் பேரரசரின் அரண்மனையில் ஓவியராகப் பணியாற்றிய இயேசு சபை அருள்சகோதரரைப் பற்றிய ஆவணப் படம்


டிச.27,2012. Qianlong என்ற சீனப் பேரரசரின் அரண்மனையில் ஓவியராகப் பணியாற்றிய இயேசு சபை அருள்சகோதரர் Giuseppe Castiglioneயின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் ஒரு தொலைக்காட்சி ஆவணப் படம் வெளியிடப்படவுள்ளது.Taiwan நாட்டின் தலைநகரான Taipeiயில் இயேசு சபையினரால் நடத்தப்படும் Kuangchi தொலைக்காட்சி நிறுவனம் தாயாரித்து வரும் இந்த ஆவணப் படம், Taiwanஇலும், சீனாவிலும் ஒளிபரப்பப்படும் என்று இத்தொலைக்காட்சி நிறுவனத்தின் உதவி இயக்குனர் அருள்தந்தை Jerry Martinson செய்தியாளர்களிடம் கூறினார்.
"சீனாவில் Giuseppe Castiglione, அரண்மனை ஓவியர், தாழ்ச்சியான பணியாளர்" என்ற தலைப்புடன் உருவாக்கப்பட்டு வரும் இப்படத்தில், சீன அரசர்களின் அரண்மனையில் பணிபுரிந்த இயேசு சபை ஓவியரின் தனிப்பட்டச் சேவை வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
சீன மண்ணில் கிறிஸ்துவ மறையைப் பரப்பிய Matteo Ricci என்ற இயேசு சபை அருள்தந்தை, அவரது சீடர் Paul Xu Guangqi, மற்றும் Adam Schall என்ற மற்றொரு இயேசு சபை அருள்தந்தை ஆகியோரைப் பற்றி உருவாக்கப்பட்ட ஆவணப் படங்களை 20 கோடிக்கும் அதிகமானோர் இதுவரை பார்த்துள்ளனர் என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.