2012-12-26 14:45:29

கடவுளின் கருணையால் நாம் விண்ணகத்தைத் தொடுவதற்கு கிறிஸ்மஸ் நல்லதொரு தருணம் - பேராயர் Nichols


டிச.26,2012. அன்னியர்களான உரோமையர் ஆதிக்கத்தில் துன்புற்ற யூதேயா நாடு, மக்கள் கணக்கெடுப்பு என்ற மற்றொரு கடினமான செய்தியைப் பெற்ற அதே வேளையில், அந்நாட்டில் நல்லதொரு செய்தியும் தோன்றியது என்று இங்கிலாந்து பேராயர் ஒருவர் கூறினார்.
கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவின் நள்ளிரவுத் திருப்பலியை Westminster பேராலயத்தில் நிறைவேற்றிய இங்கிலாந்து ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Vincent Nichols, தன் மறையுரையை இவ்வாறு ஆரம்பித்தார்.
இருள், அநீதி என்ற பல குறைகள் மலிந்திருந்த யூதேயாவில் ஒரு குழந்தையாக மீட்பர் பிறந்தது, கை நழுவிச் செல்வது போலத் தோன்றிய பல நல்லவைகளை மீண்டும் அம்மக்கள் மத்தியில் தந்த இறைவனின் அற்புதச் செயல் என்று பேராயர் Nichols தன் மறையுரையில் வலியுறுத்தினார்.
கடவுளின் கருணையால் நாம் விண்ணகத்தைத் தொடுவதற்கு கிறிஸ்மஸ் நல்லதொரு தருணம் என்று கூறிய பேராயர் Nichols, இத்தருணத்தில் நாம் மீண்டும் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள அழைக்கப்பட்டுள்ளோம் என்றும் எடுத்துரைத்தார்.








All the contents on this site are copyrighted ©.