2012-12-22 15:50:02

பாகிஸ்தானில் 2012ம் ஆண்டில் ஒன்பது வழிபாட்டுத்தலங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன


டிச.22,2012. பாகிஸ்தானில் 2012ம் ஆண்டில் ஒன்பது வழிபாட்டுத்தலங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன, அழிக்கப்பட்டுள்ளன அல்லது சூறையாடப்பட்டுள்ளன என்று அந்நாட்டு ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி ஆணையம் வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது.
சிறுபான்மை மக்களுக்குப் புனிதமான இடங்களாக அமைந்துள்ள ஐந்து கிறிஸ்தவ ஆலயங்கள், மூன்று இந்துமதக் கோவில்கள், அஹ்மதி இசுலாமியப் பிரிவின் ஒரு மசூதி ஆகியவை இசுலாமியத் தீவிரவாதக் குழுவால் சேதப்படுத்தப்பட்டுள்ளன என்று அவ்வறிக்கை மேலும் கூறுகின்றது.
சிறுபான்மை மக்களின் 27 வழிபாட்டுத்தலங்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் சேதப்படுத்தப்பட்டுள்ளன என்றும், பாகிஸ்தான் தலத்திருஅவையின் நீதி மற்றும் அமைதி ஆணையம் வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது.
இதற்கிடையே, அமெரிக்க ஐக்கிய நாட்டில் 2011ம் ஆண்டில் கத்தோலிக்கருக்கெதிரான 68 குற்றங்கள் இடம்பெற்றுள்ளன என்று அந்நாட்டில் வெளியான ஓர் அறிக்கை தெரிவிக்கின்றது.







All the contents on this site are copyrighted ©.