2012-12-22 15:43:13

எருசலேம் இலத்தீன்ரீதி முதுபெரும் தலைவரின் கிறிஸ்மஸ் செய்தி


டிச.22,2012. பல்சமய உரையாடல் ஒருவரையொருவர் மதிக்கும் செயல்களில்தான் பலன்களைத் தர முடியும் என்று எருசலேம் இலத்தீன்ரீதி முதுபெரும் தலைவர் Fouad Twal தனது கிறிஸ்மஸ் செய்தியில் கூறியுள்ளார்.
ஆலயங்கள், துறவுசபை இல்லங்கள், யூதர்களின் தொழுகைக்கூடங்கள், கல்லறைகள் ஆகியவை சேதப்படுத்தப்பட்டது ஒவ்வொரு மனிதரையும் புண்படுத்தும் செயல்கள் என்பதைத் தான் மீண்டும் கூற விரும்புவதாகவும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் முதுபெரும் தலைவர் Twal.
சிரியாவில் தொடர்ந்து இடம்பெறும் வன்முறை கிறிஸ்மஸ் மகிழ்ச்சியைக் குலைக்கின்றது எனவும், ஜோர்டனிலுள்ள 2 இலட்சத்து 50 ஆயிரம் சிரியா நாட்டு அகதிகளுக்கு உதவுவதில் தங்களது திருஅவை முழுமூச்சுடன் செயல்பட்டு வருகிறது எனவும் அச்செய்தி தெரிவிக்கிறது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்துக்கு இடையே அமைதி ஏற்படுவதற்கு “இரு நாடுகள்” என்ற தீர்வை நோக்கி உழைப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் ஒபாமாவுக்கும் எருசலேம் இலத்தீன்ரீதி முதுபெரும் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.







All the contents on this site are copyrighted ©.