2012-12-12 16:30:44

பிலிப்பின்ஸ் பாராளு மன்றத்தில் குழந்தைப்பேறு நல சட்டவரைவு வாக்கெடுப்புக்கு கத்தோலிக்கர்களின் எதிர்ப்பு


டிச.12,2012. பிலிப்பின்ஸ் நாட்டின் பாராளு மன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்படும் குழந்தைப்பேறு நல சட்டவரைவு, தோல்வியடைய கத்தோலிக்கர்கள் வேண்டிக்கொள்ளுமாறு பிலிப்பின்ஸ் ஆயர் பேரவையின் குடும்பநலப் பணி அவையின் செயலர் அருள்தந்தை Melvin Castro, ஆயர் பேரவை சார்பில் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.
இதே கருத்துக்காக, Makaty எனும் நகரில் அமைந்துள்ள குவாதலுபே அன்னைத் திருத்தலத்தில் திருவிழிப்பு செபங்கள் நடைபெறும் என்று மணிலா பேராயர் கர்தினால் Luis Antonio Tagle அறிவித்துள்ளார்.
குவாதலுபே மரியன்னைத் திருநாளன்று இத்தகைய வாக்கெடுப்பு இடம்பெறுவது கத்தோலிக்கர்களின் மனதைப் புண்படுத்தும் ஒரு முயற்சி என்று கருதப்படுவதாக ஆசிய செய்தி நிறுவனம் கூறியது.
அரசின் இந்த முயற்சிக்கு எதிராக, பாராளுமன்றத்தின் அருகே அமைந்துள்ள புனித பேதுரு கோவிலில் ஒரு திருப்பலியும், அதைத் தொடர்ந்து ஒரு ஊர்வலமும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.