2012-12-11 15:14:40

காங்கோ குடியரசில் மோதல்களால் 600 கல்விக்கூடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன


டிச. 11, 2012. காங்கோ குடியரசில் இடம்பெறும் மோதல்களால் இவ்வாண்டில் 600 கல்விக்கூடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் குழந்தைகள் நிதி அமைப்பு அறிவித்துள்ளது.
உள்நாட்டுச் சண்டைகளால் காங்கோ நாட்டில் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் முதல் இரண்டு இலட்சத்து நாற்பதாயிரம் மாணவர்கள் கல்விக்கூடங்களுக்குச் செல்லமுடியா நிலை இருப்பதாகவும் யுனிசெஃப் அமைப்பு கவலையை வெளியிட்டுள்ளது.
உள்நாட்டு மோதலால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், சில பள்ளிகளில் அடைக்கலம் தேடியுள்ளதாலும், சில பள்ளிகளில் இராணுவத் தளவாடங்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாலும், நாட்டில் மாணவர்களின் கல்வி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. அமைப்பு கூறுகின்றது.








All the contents on this site are copyrighted ©.