2012-12-08 16:23:07

AIDS நோயுற்றோரிடையே பணியாற்றும் கத்தோலிக்கப் பணி மையத்திற்கு மத்தியப்பிரதேச மாநில அரசின் சிறப்பு விருது


டிச.08,2012. HIV நோய் கிருமிகளுடன் வாழும் ஏறத்தாழ 4000 பேருக்கு ஆற்றிவரும் உன்னதப் பணிகளுக்கென, கத்தோலிக்கப் பணி மையம் ஒன்றுக்கு, மத்தியப்பிரதேசத்தின் பாரதிய ஜனதா அரசு சிறப்பு விருது ஒன்றை வழங்கியுள்ளது.
AIDS நோயுற்றோரிடையே பணியாற்றும் தூய ஆவியாரின் பணியாளர்கள் (Servants of the Holy Spirit Sisters) என்ற துறவு சபை அருள்சகோதரிகள் நடத்திவரும் Vishwas சமூக அக்கறை மையத்தின் சிறப்புப் பணிகளுக்கு, மத்தியப்பிரதேச மாநில நலத்துறை அமைச்சர் Anup Misra இவ்விருதை வழங்கினார்.
மத்தியப்பிரதேசத்தின் Indoreல் இத்துறவுச் சபையினர் 2008ம் ஆண்டுமுதல் நடத்திவரும் AIDS நோயுற்றோர் பணி மையம், இந்நோயுற்றோரின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உழைத்து வருகிறது.








All the contents on this site are copyrighted ©.