2012-12-06 16:01:27

குழந்தைப்பேறு சட்டம் குறித்த பிரச்சனையில் பாராளுமன்றம் அதிக அவசரம் காட்டுகிறது - பிலிப்பின்ஸ் ஆயர்கள்


டிச.06,2012. குழந்தைப்பேறு குறித்த ஒரு சட்டத்தை பிலிப்பின்ஸ் பாராளுமன்றம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதையொட்டி, அந்நாட்டு ஆயர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இச்செவ்வாயன்று விண்ணப்பம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
மணிலா பேராயர் கர்தினால் Luis Antonio Tagle அவர்கள் தலைமையில் கூடிவந்த பிலிப்பின்ஸ் ஆயர்கள், இந்தப் பிரச்சனையில் பாராளுமன்றம் அதிக அவசரம் காட்டுகிறது என்று கூறினர்.
மக்களின் வாழ்வைப் பலவகையிலும் பாதிக்கும் இந்த விடயத்தில் இன்னும் அதிகமான ஆலோசனைகளை மக்களின் பிரதிநிதிகள் பெற்றபின்னரே இந்த முக்கிய முடிவை எடுக்க வேண்டுமென்று 14 ஆயர்கள் கையெழுத்திட்டுள்ள இந்த விண்ணப்பம் கூறியுள்ளது.
டிசம்பர் 21ம் தேதி அந்நாட்டு பாராளுமன்றம் கிறிஸ்மஸ் விடுமுறைக்காக கலைந்து செல்வதற்கு முன்பாக இந்த முடிவு எடுக்கப்படும் என்று சொல்லப்படுவதால், ஆயர்கள் இந்த விண்ணப்பத்தை விடுத்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.