2012-12-05 16:13:34

நடைபெறவிருக்கும் ஆசிய ஆயர்கள் பேரவைக் கூட்டம், வியட்நாம் திருஅவைக்கு புத்துணர்வை வழங்கும் - Saigon கர்தினால்


டிச.05,2012. டிசம்பர் 11ம் தேதி முதல் 16ம் தேதி முடிய வியட்நாமில் நடைபெறவிருக்கும் ஆசிய ஆயர்கள் பேரவைக் கூட்டம், வியட்நாம் திருஅவைக்கும், கத்தோலிக்க மக்கள் அனைவருக்கும் புத்துணர்வை வழங்கும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார் Saigon பேராயர் கர்தினால் Pham Minh Man.
வருகிற செவ்வாயன்று Ho Chi Minh நகரில் நடைபெறும் ஆறு நாள் கூட்டத்தில் மணிலா உயர் மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர் கர்தினால் Gaudencio Rosales திருத்தந்தையின் சார்பில் கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசியாவின் பல்வேறு நாடுகளிலிருந்து இக்கூட்டத்தில் கலந்துகொள்ள வருகை தரும் 118 பிரதிநிதிகளுக்கு வியட்நாம் அரசு நாட்டுக்குள் நுழையும் அனுமதியை எவ்விதத் தடையுமின்றி அளித்துள்ளது என்பதைச் சிறப்பான முறையில் கர்தினால் Minh Man சுட்டிக்காட்டினார்.
மதச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அண்மைய காலங்களில் வியட்நாம் அரசு சீன அரசின் வழியில் செல்லக்கூடும் என்ற ஐயம் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.