2012-12-01 14:47:32

எய்ட்ஸ் நோய்த் தொடர்புடைய இறப்புக்களை நிறுத்துவதற்கு இந்தியத் திருஅவை அர்ப்பணம்


டிச.01,2012. உலகில் 2015ம் ஆண்டுக்குள் எய்ட்ஸ் நோயை முற்றிலும் ஒழிப்பது குறித்த ஐ.நா.எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் இலக்கைத் தொடர்ந்து இந்தியத் திருஅவையும், 2015ம் ஆண்டுக்குள் எய்ட்ஸ் தொடர்புடைய இறப்புக்களை நிறுத்துவதற்குத் தன்னை அர்ப்பணித்துள்ளது.
டிசம்பர் முதல் தேதி இச்சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்ட அனைத்துலக எய்ட்ஸ் நோய் தினத்தையொட்டி செய்தி வழங்கிய பேராயர் வின்சென்ட் கொன்செஸ்சாவோ, பொது சமுதாயத்தோடு சேர்ந்து திருஅவையும் எய்ட்ஸ் நோயை ஒழிப்பதற்குத் தன்னை அர்ப்பணித்துள்ளது என்று கூறினார்.
2012ம் ஆண்டின் அனைத்துலக எய்ட்ஸ் நோய் தினத்தையொட்டி ஐ.நா.நிறுவனங்கள் வெளியிட்ட அறிக்கையில், வருவாய்க் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள 25 நாடுகளில் எய்ட்ஸ் நோய்க் கிருமிகளால் புதிதாகத் தாக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை 50 விழுக்காட்டுக்கும் மேலாகக் குறைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
மேற்கு வங்காளம், குஜராத், ஒடிசா, பீஹார், சட்டீஸ்கார், அசாம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையும், எய்ட்ஸ் நோயாளிகளுக்கு நலவாழ்வு மையங்களை 2007ம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து அமைத்துள்ளது.







All the contents on this site are copyrighted ©.