2012-11-28 15:55:13

கர்தினால் Angelo Dalla Costaவுக்கு "நாடுகளிடையே வாழும் நல்லோர்" விருது


நவ.28,2012. 1931ம் ஆண்டிலிருந்து 1961ம் ஆண்டு முடிய இத்தாலியின் Florence உயர்மறைமாவட்டத்தின் பேராயராகப் பணியாற்றிய கர்தினால் Angelo Elia Dalla Costa, அவர்களுக்கு "நாடுகளிடையே வாழும் நல்லோர்" (Righteous Among the Nations) என்ற உயரிய விருதை Yad Vashem என்ற யூத அமைப்பு ஒன்று இத்திங்களன்று வழங்கியது.
இரண்டாம் உலகப் போரின்போது, வன்முறைகளுக்கு உள்ளான யூதர்களை Florence நகரில் கர்தினால் Dalla Costa அடைக்கலம் கொடுத்து காத்துவந்ததால் இவ்விருது அவருக்கு வழங்கப்படுகிறது என்று YV அமைப்பு வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
பேராயரான கர்தினால் Dalla Costa, யூதர்களைக் காக்கும் பணியில் தன் மறைமாவட்டக் குருக்களையும் ஈடுபடுமாறு கேட்டுக்கொண்டார் என்றும், தனது செயலராகப் பணியாற்றிய அருள்தந்தையை இப்பணியின் ஒருங்கிணைப்பாளராக ஏற்படுத்தினார் என்றும் சொல்லப்படுகிறது.
இரண்டாம் உலகப் போரின்போது யூதர்களுக்கு எதிராக எழுந்த வன்முறைகளிலிருந்து அக்குலத்தவரைக் காத்தவர்களுக்கு "நாடுகளிடையே வாழும் நல்லோர்" என்ற விருது 1953ம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வந்தள்ளது. இதுவரை பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 24000க்கும் அதிகமானோருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் 530 பேர் இத்தாலியர்கள்.








All the contents on this site are copyrighted ©.