2012-11-27 15:27:33

கிறிஸ்தவக் கோவில் தாக்கப்பட்டுள்ளது குறித்து நைஜீரியக் கர்தினால் கண்டனம்


நவ.27,2012. நைஜீரியாவின் இராணுவ முகாமிலுள்ள கிறிஸ்தவக்கோவில் ஒன்று தாக்கப்பட்டுள்ளது குறித்து கண்டனத்தை வெளியிட்டுள்ள அந்நாட்டு கர்தினால் John Onaiyekan, நாட்டில் பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருவது குறித்த கவலையையும் தெரிவித்துள்ளார்.
ஞாயிறன்று இடம்பெற்ற மனித வெடிகுண்டுத் தாக்குதல் குறித்து Aid to the Church in Need என்ற கத்தோலிக்க உதவி அமைப்புக்குப் பேட்டியளித்த கர்தினால், மிகவும் பாதுகாப்பானது என கருதப்படும் இராணுவ முகாமுக்குள்ளேயே வெடிகுண்டுத் தாக்குதல் இடம்பெற்றிருப்பது, நாட்டில் எந்த இடத்திலும் இத்தகைய தாக்குதல் இடம்பெறலாம் என்ற அச்சத்தைத் தந்துள்ளது என்றார்.
இத்தாக்குதல் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளது என்ற கர்தினால், வன்முறைகளுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.








All the contents on this site are copyrighted ©.