2012-11-24 14:18:28

உலகில் இருபது கோடிக் கிறிஸ்தவர்கள் அச்சுறுத்தலை எதிர்நோக்குகின்றனர்


நவ.24,2012. உலகில், மற்ற சமயத்தினரைவிட கிறிஸ்தவர்கள் அதிக அளவில் அச்சுறுத்தலை எதிர்நோக்குகின்றனர் என்று Rupert Shortt என்ற நிருபர் வெளியிட்ட அண்மைப் புத்தகம் ஒன்று தெரிவிக்கிறது.
சமயத் தலைப்புக்களில் பல்வேறு நூல்களை வெளியிட்டுள்ள பத்திரிகையாளர் Shortt, அண்மையில் “Cristianophobia” என்ற தலைப்பில் ஒரு நூலை வெளியிட்டுள்ளார்.
சகிப்பற்றதன்மை என்ற பிரச்சனையால் கோடிக்கணக்கான கிறிஸ்தவர்கள் துன்புறுகின்றனர் என அந்த நூலில் குறிப்பிட்டுள்ள Shortt, கடந்த பத்து ஆண்டுகளில் இப்பிரச்சனை அதிகரித்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
ஈராக்கில் 12 இலட்சமாக இருந்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை, தற்போது 2 இலட்சத்துக்கும் குறைவாகவே இருப்பதாகவும், 2003ம் ஆண்டிலிருந்து 2011ம் ஆண்டின் தொடக்க காலம் வரை ஏறக்குறைய 63 ஆலயங்களில் குண்டு வீசப்பட்டன மற்றும் ஆக்ரமிக்கப்பட்டன எனவும் அந்நூலில் கூறப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.