2012-11-24 14:25:16

ஆக்ஸஃபாம் : காசாவுக்கானப் பொருளாதாரத் தடைகள் அகற்றப்பட வேண்டும்


நவ.24,2012. காசாவில் அமைதி இடம்பெறுவதற்குத் தற்போது கையெழுத்திடப்பட்டுள்ள போர்நிறுத்த ஒப்பந்தம் மட்டும் போதாது, மாறாக, அப்பகுதியில் ஐந்து ஆண்டுகளாக அமலில் இருக்கும் பொருளாதாரத் தடைகள் அகற்றப்பட வேண்டுமென்று ஆக்ஸஃபாம் என்ற பிரிட்டன் பிறரன்பு அமைப்பு கூறியது.
இந்தப் பொருளாதாரத் தடைகள், காசா பகுதிக்கான ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளைக் கட்டுப்படுத்துவதோடு, அப்பகுதியின் பொருளாதாரத்தையும் அழித்துள்ளன என்று ஆக்ஸஃபாம் அமைப்பின் பேச்சாளர் Martin Hartberg கூறினார்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டுவரப்பட்ட இந்தப் பொருளாதாரத் தடைகளினால் அப்பகுதியின் 80 விழுக்காட்டு மக்களுக்கு உதவிகள் தேவைப்படுகின்றன என்றும் Hartberg கூறினார்.
பிரிட்டனை மையமாகக் கொண்டு செயல்படும் ஆக்ஸஃபாம் பிறரன்பு அமைப்பு, உலகின் மிகப் பெரிய அரசு-சாரா நிறுவனங்களில் ஒன்றாகும்.







All the contents on this site are copyrighted ©.