2012-11-22 15:43:57

பல்சமய உரையாடல் திருப்பீட அவையும், இஸ்லாமிய கலாச்சாரம் மற்றும் உறவுகள் அமைப்பும் இணைந்து நடத்திய கருத்தரங்கு


நவ.22,2012. பல்சமய உரையாடல் திருப்பீட அவையும், இஸ்லாமிய கலாச்சாரம் மற்றும் உறவுகள் அமைப்பும் இணைந்து நவம்பர் 19, இத்திங்கள் முதல் இப்புதன் முடிய உரோம் நகரில் கருத்தரங்கு ஒன்றை நடத்தின.
திருப்பீடத்தின் சார்பில், பல்சமய உரையாடல் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran, பேராயர் Ramzi Garmou உட்பட பல கத்தோலிக்க அறிஞர்களும், இஸ்லாமிய அமைப்பின் சார்பில் அதன் தலைவர் Mohammad Bagher Korramshad, முனைவர் Mohammad Reza Dehshiri உட்பட பல அறிஞர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
நீதியின் இலக்கணம், தனிமனிதருக்கு உரிய நீதி, சமுதாயத்தின் பல்வேறு அங்கங்களில் இருக்கவேண்டிய நீதி, மற்றும் மனித சமுதாயம் அனைத்திற்கும் நீதி என்ற நான்கு பிரிவுகளில் விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டன.
திறந்த மனதோடும் நட்புறவோடும் நடைபெற்ற இக்கருத்தரங்கில், நீதிக்கும் அமைதிக்கும் அண்மைக்காலங்களில் எழுந்துள்ள சவால்கள், நீதியை நிலைநாட்ட சமயத் தலைவர்கள் ஆற்றவேண்டிய கடமைகள் ஆகிய கருத்துக்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டன.








All the contents on this site are copyrighted ©.