2012-11-21 16:38:38

தேவதாசி இனத்தைச் சேர்ந்தவர்களின் நல்வாழ்வுக்கென உழைக்கும் அருள்சகோதரிகள்


நவ.21,2012 இந்தியாவில் நிலவும் சாதிய பாகுபாடுகளின் ஓர் அவலமான அடையாளமாக, பாலியல் தொழிலுக்கென ஒதுக்கப்பட்டுள்ள ‘தேவதாசி’ இனத்தைச் சேர்ந்தவர்களுக்கென அருள்சகோதரிகள் சிலர் கர்நாடக மாநிலத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
Chavanod புனித சிலுவை சகோதரிகள் என்றழைக்கப்படும் துறவு சபையைச் சேர்ந்த இச்சகோதரிகள், தேவதாசி முறையால் மதிப்பை இழந்து வாழும் பத்து கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் மத்தியில் உழைத்து வருகின்றனர்.
இப்பெண்களுக்கு வேறு சில தொழில்களில் பயிற்சிகள் அளிப்பதும், இப்பெண்களின் குழந்தைகளுக்குக் கல்வி புகட்டுவதும் இச்சகோதரிகள் மேகொண்டுள்ள முக்கிய பணி என்று அருள்சகோதரி T.Jose ஆசிய செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
இந்தியாவில் தேவதாசி முறை 1998ம் ஆண்டு சட்டப்பூர்வமாக ஒழிக்கப்பட்டிருந்தாலும், கர்நாடகாவின் பெண்கள் குழந்தைகள் நல அமைப்பு ஒன்று மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி, Raichur என்ற மாவட்டத்தில் மட்டும் 2008ம் ஆண்டு 5051 பெண்கள் தேவதாசிகள் என்ற முத்திரையுடன் வாழ்ந்தனர் என்று தெரிகிறது.








All the contents on this site are copyrighted ©.