2012-11-21 15:51:55

கவிதைக் கனவுகள் - வெற்றி நிச்சயம் .... எழுதியவர் உமா
“எனதுதமிழ்க்கவிதைகள்” என்ற இணைய முகவரியிலிருந்து எடுக்கப்பட்டது.


வாழ்க்கை
ஓட்டப் பந்தயம்!
ஜனனம்
துவக்கம்
மரணம்
இலக்கு!

மன நிறைவே
வெற்றி...
ஆசை
தோல்வியின் முதற்படி

சிலரது வாழ்க்கை
நூறு மீட்டர் பந்தயம்
துரிதமாய்த் துவங்கி
சிகரம் எட்டி
சட்டென முடியும்..
பாரதி போல்

சிலருக்கு
உடல் தளர்ந்து
இலக்கடையும்
நீண்ட ஓட்டம்
இலக்கடைவது
நிச்சயம்...

வெற்றிக்கனி
சிலருக்குத்தான்....

வெற்றி வேண்டுமா?

மீண்டும் எழுக!
ஆசை
கோபம்
பொறாமை
தடைகள் கடந்து
தாண்டிச் செல்க!

இலக்கடைகையில்
வெற்றி நிச்சயம்...







All the contents on this site are copyrighted ©.