2012-11-19 16:08:47

காப்டிக் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையின் திருத்தந்தைக்கு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வாழ்த்து


நவ.19,2012. காப்டிக் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையின் திருத்தந்தையாக இஞ்ஞாயிறன்று பொறுப்பேற்ற இரண்டாம் Tawadros அவர்களை, தூயஆவியார் வழி நடத்தவேண்டுமென்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வாழ்த்தினார்.
இஞ்ஞாயிறன்று கெய்ரோ நகரில் அமைந்துள்ள புனித மார்க் பேராலயத்தில் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையின் 118வது தலைவராக, இரண்டாம் Tawadros அரியணை ஏற்றப்பெற்றார். இவ்விழாவையொட்டி, திருத்தந்தை அவருக்கு தன் வாழ்த்துக்களை, கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Kurt Koch வழியாக அனுப்பிவைத்தார்.
காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையும், கத்தோலிக்கத் திருஅவையும் வருங்காலத்தில் இன்னும் நெருக்கமாக இணைந்து வருவதையும், சகோதரப் பரிவுடன் ஒத்துழைப்பதையும் தான் விரும்புவதாக திருத்தந்தை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாண்டு மார்ச் மாதம் இறையடி சேர்ந்த மூன்றாம் Shenouda அவர்களின் மறைவுக்குப் பின், காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையின் தலைவராக நவம்பர் 4ம் தேதி இரண்டாம் Tawadros தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இப்பொறுப்பை வகிப்பவர்கள் அலேக்சாந்திரியாவின் திருத்தந்தை என்றும், அனைத்து ஆப்ரிக்க சபைகளின் முதுபெரும் தலைவர் என்றும் அழைக்கப்படுவர்.








All the contents on this site are copyrighted ©.