2012-11-19 16:12:02

காகிதம் போன்ற மிக மெல்லியதான குண்டு துளைக்காதப் பொருள் கண்டுபிடிப்பு


நவ.19,2012. காகிதம் போன்ற மெல்லிய அளவு கொண்ட குண்டு துளைக்காதப் பொருளை அமெரிக்க அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதுவரைப் பயன்படுத்தப்பட்டுவரும் குண்டு துளைக்காத உடைகளைத் தயாரிக்க, தடினமான உலோகங்கள் பயன்படுத்தப்படுவதால், இவ்வுடைகளை அணிவது சிரமமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வல்லுனர்கள் Edwin Thomas, Jae-Hwang Lee, என்ற இருவரும் தற்போது "நானோ" தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, காகிதம் போன்ற மெல்லிய, குண்டு துளைக்காதப் பொருளைக் கண்டுபிடித்துள்ளனர்.
கண்ணாடி போன்று பளபளப்பாகவும், இரப்பரைப் போன்று வளையும் தன்மையும் கொண்ட இப்பொருள், துப்பாக்கி குண்டுகளைத் துளைக்கவிடாமல் தடுப்பதை வெற்றிகரமாக ஆய்வு செய்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.