2012-11-17 17:10:00

வாழ்வுக்குப் பாதுகாப்பு தரக்கூடிய ஊதியத்தைக் கத்தோலிக்க நிறுவனங்கள் வழங்கவேண்டும் - ஆயர்கள் முடிவு


நவ.17,2012. உழைப்பாளிகளின் வாழ்வுக்குப் பாதுகாப்பு தரக்கூடிய ஊதியத்தைக் கத்தோலிக்க நிறுவனங்கள் வழங்கவேண்டும் என்ற ஒரு முடிவினை, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கத்தோலிக்க ஆயர்கள் இணைந்து இவ்வெள்ளியன்று நிறைவேற்றினர்.
நவம்பர் 21, வருகிற புதனன்று, இங்கிலாந்தில் அனைத்து கிறிஸ்தவ சபைகளும் இணைந்து நடத்தவிருக்கும் ஒரு சிறப்பு மாமன்றத்தில் 'வாழ்வுக்குப் பாதுகாப்பளிக்கும் ஊதியம்' என்ற கருத்து வலியுறுத்தப்படும் என்று தெரிகிறது.
கத்தோலிக்கத் திருஅவையும், இங்கிலாந்து கிறிஸ்தவ சபையும் இணைந்து நடத்தவிருக்கும் இச்சிறப்புக் கூட்டத்தில், உழைப்பாளிகளின் தினக் கூலி குறைந்தது 7.45 பவுண்டு, அதாவது ஏறத்தாழ 500 ரூபாயாவது இருக்க வேண்டும் என்பது பரிந்துரைக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.