2012-11-14 15:53:43

கத்தோலிக்க உழைப்பாளர் இயக்கத்தைத் தோற்றுவித்த Dorothy Dayயைப் புனிதராக உயர்த்தும் முயற்சிகள்


நவ.14,2012. கத்தோலிக்க உழைப்பாளர் இயக்கத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரான Dorothy Day அவர்களைப் புனிதராக உயர்த்தும் முயற்சிகளைத் துவக்கலாம் என்று அமெரிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.
தற்போது Baltimore நகரில் நடைபெற்றுவரும் அமெரிக்க ஆயர்கள் பேரவையின் ஆண்டுக் கூட்டத்தில் இந்த முயற்சி பற்றி பேசப்பட்டபோது, அனைத்து ஆயர்களும் ஆர்வமான குரல் எழுப்பி இதை வரவேற்றனர் என்று கூறப்படுகிறது.
1897ம் ஆண்டு நியூயார்க்கின் Brooklyn என்ற இடத்தில் பிறந்த Dorothy Day, குழந்தை பருவத்திலும், இளமையிலும் பல்வேறு துன்பங்களையும் போராட்டங்களையும் சந்தித்தார். பின்னர், கத்தோலிக்கத் திருமறையைத் தழுவினார்.
80 ஆண்டுகளுக்கு முன்னர் Peter Maurin என்பவருடன் இணைந்து கத்தோலிக்க உழைப்பாளர் இயக்கத்தைத் துவக்கிய Dorothy Day, 1980ம் ஆண்டு காலமானார்.
இவரைப் புனிதராக்கும் முயற்சிகளை முன்னாள் நியூயார்க் பேராயர் கர்தினால் John O'Connor துவக்கி வைத்தார்.








All the contents on this site are copyrighted ©.