2012-11-14 15:55:07

உலகில் விற்பனையாகும் பத்து மருந்துகளில் ஒன்று போலி மருந்து


நவ.14,2012. உலகில் விற்பனையாகும் பத்து மருந்துகளில் ஒன்று போலி மருந்து என்றும், எனவே உலக அரசுகள் இந்த ஆபத்தை எதிர்கொள்ள தீவிர நடவடிக்கைகள் மேகொள்ளவேண்டும் என்றும் WHO உலக நலவாழ்வு நிறுவனம் அறிவித்துள்ளது.
மலேரியாவுக்கு வழங்கப்படும் மருந்துகளில் மூன்றில் ஒன்று போலியான மருந்து என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது.
British Medical Journal என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ள ஓர் ஆய்வறிக்கையின்படி, போலி மருந்துகள் வளரும் நாடுகளில் மட்டுமல்ல, வளர்ச்சி அடைந்துள்ள நாடுகளிலும் பரவலாகக் காணக்கிடக்கிறது என்று கூறப்படுகிறது.
அண்மையில் அமெரிக்காவில் விற்கப்பட்ட போலி மருந்துகளால் மூளைகாய்ச்சல் உருவாகி 15 பேர் இறந்துள்ளனர்.
உலகின் வெகு சில நாடுகளிலேயே மருத்துகளைப் பற்றிய மிகக் கடுமையான விதிமுறைகள் உள்ளன என்றும், உலக நாடுகளில் மூன்றில் ஒருபகுதி நாடுகளில் மருந்து விற்பனைக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை என்றும் WHO வெளியிட்டுள்ள அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.








All the contents on this site are copyrighted ©.