2012-11-13 15:54:53

மனமாற்றம் மற்றும் ஒப்புரவு குறித்து அமெரிக்க ஆயர்கள் பேரவை


நவ.13,2012. ஆயர்களும் தங்கள் பாவங்களை ஏற்று, பாவப்பரிகாரத்தின் வழியாகக் கிடைக்கும் அருள் அனுபவங்களைப் பெற்றாலொழிய அவர்களால் பேச்சுவார்த்தைகளிலும், சவால்களை எதிர்கொள்வதிலும் ஈடுபடமுடியாது என்றார் அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியூ யார்க் கர்தினால் Timothy Dolan.
இத்திங்கள் முதல் வியாழன் வரை அமெரிக்க ஐக்கிய நாட்டின் Baltimoreல் இடம்பெறும் அந்நாட்டு ஆயர்களின் ஆண்டு நிறையமர்வுக்கூட்டத்தில் உரையாற்றிய கர்தினால் Dolan, ஒப்புரவு எனும் அருள் அடையாளத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.
அமெரிக்க ஆயர்களின் கூட்டத்தில் தலைமை தாங்கி உரையாற்றிய அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கான திருப்பீடப் பிரதிநிதி பேராயர் Carlo Maria Vigano, மக்களின் நம்பிக்கையையும் விசுவாசத்தையும் பெறவேண்டுமெனில் ஆயர்களும் தொடர்ந்து மனமாற்றத்திற்கு தங்களை உட்படுத்தவேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஆயர்கள் அனைவரும் மத விடுதலையும் திருமணமும் பாதுகாக்கப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.







All the contents on this site are copyrighted ©.