2012-11-13 16:03:37

துருக்கி–சிரியா எல்லைப்பகுதியில் அச்சத்துடன் வாழும் மக்கள் - சிரிய ஆர்த்தடாக்ஸ் பேராயர்


நவ.13,2012. துருக்கிக்கும் சிரியாவிற்கும் இடையே எந்நேரமும் போர் மூளும் அபாயம் இருப்பதால் மக்கள் தங்கள் வருங்காலம் குறித்த அச்சத்துடனேயே வாழ்ந்துவருவதாக கவலையை வெளியிட்டுள்ளார் சிரிய ஆர்த்தடாக்ஸ் பேராயர் Eustathius Matta roham.
பெரும் அளவில் சிரிய அகதிகள் நாட்டிற்குள் புகுவதையொட்டி துருக்கி சிரியா எல்லைப்பகுதியில் வன்முறைகள் இடம்பெற்றுவருவதைக் குறித்து கவலை வெளியிட்ட Jazirah மற்றும் Euphrates உயர்மறைமாவட்ட பேராயர் Matta roham, சிறு சிறு மோதல்கள் பெரிய போராக உருவெடுக்கும் ஆபத்தையும் சுட்டிக்காட்டினார்.
போரின் அச்சத்தால் மக்கள் எந்நேரமும் நாட்டை விட்டு வெளியேற தயாராக இருப்பது குறித்த கவலையும் பேராயர் Matta rohamஆல் வெளியிடப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.