2012-11-09 15:48:59

மோதல்களில் ஈடுபட்டுள்ள குழுக்கள் உண்மையான உரையாடலை மேற்கொள்ள வேண்டும் - ஈராக் ஆயர்கள் வேண்டுகோள்


நவ.09,2012. மத்தியக்கிழக்குப் பகுதியில் உள்ள பல நாடுகளில், மோதல்களிலும், வன்முறையிலும் ஈடுபட்டுள்ள குழுக்கள், தங்கள் தன்னலக் கொள்கைகளை விடுத்து, உண்மையான உரையாடலை மேற்கொள்ள வேண்டும் என்று ஈராக் ஆயர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இச்செவ்வாய், புதன் ஆகிய இரு நாட்கள் ஈராக் கத்தோலிக்கத் திருஅவை ஆயர்கள் Kurdistanல் உள்ள Ankawa என்ற நகரில் தங்கள் ஆண்டு கூட்டத்தை நடத்தினர். இக்கூட்டத்தின் இறுதியில் ஆயர்களின் சார்பில் Kirkuk பேராயர் Louis Sako, ஆயர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட நான்கு தீர்மானகள் அடங்கிய அறிக்கையொன்றை வெளியிட்டார்.
மத்தியக் கிழக்குப் பகுதியில், முக்கியமாக, ஈராக் நாட்டில் இன்றளவும் தொடந்துவரும் கிறிஸ்தவர்களின் வெளியேற்றம் குறித்து இவ்வறிக்கையில் ஆயர்கள் தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.
மத்தியக் கிழக்குப் பகுதியில் வாழும் அனைவருமே சகிப்புத் தன்மையையும், ஏனைய மதங்களை மதிக்கும் மனப்பான்மையையும் வளர்த்துக் கொள்வது, நீதியும், அமைதியும் நிறைந்த ஒரு சமுதாயத்தை உருவாக்க சிறந்த வழி என்று ஆயர்கள் கூறியுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.