2012-11-09 15:49:24

போபால் நச்சுவாயு விபத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மேற்கொண்ட சட்டரீதியான ஒரு போராட்டத்தில் வெற்றி


நவ.09,2012. போபால் நச்சுவாயு விபத்தினால் பாதிக்கப்பட்டுள்ள 25000க்கும் அதிகமான மக்கள், மத்தியப்பிரதேச அரசுக்கு எதிராக மேற்கொண்ட சட்டரீதியான ஒரு போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்தியாவின் போபால் நகரில் Union Carbide நிறுவனத்தில் 1984ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி இரவு ஏற்பட்ட நச்சுவாயு கசிவினால், இதுவரை 25,000க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். இன்னும் பல்லாயிரம் பேர் உடல் நலக் குறைவுடன் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களில் 25,000க்கும் அதிகமானோர் தங்களுக்கு சுத்தமான குடி நீரை அரசு வழங்க வேண்டுமென்று கடந்த பல ஆண்டுகள் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இவர்களுக்கு சுத்தமான குடி நீரை அரசு வழங்க வேண்டும் என்று இந்தியாவின் உச்ச நீதி மன்றம் இச்செவ்வாயன்று ஆணை பிறப்பித்துள்ளது.
நச்சுவாயுவால் பாதிக்கப்பட்டோர் பல ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் போராட்டத்திற்கு கிடைத்த ஒரு நீதியான முடிவே உச்ச நீதி மன்றத்தின் இந்த ஆணை என்று, 1984ம் ஆண்டு முதல் இப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த Rachana Dhingra கூறினார்.








All the contents on this site are copyrighted ©.