2012-11-09 15:50:14

பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராமம்


நவ.09,2012. விருந்தினர் போல வந்து தங்கியிருக்கும் வவ்வால் மற்றும் புல்புல், மைனா உள்ளிட்ட பல்வேறு பறவை இனங்களுக்குத் தொந்திரவாக இருக்கும் என்பதால் வரவிருக்கும் தீபாவளிக்கு யார் வீட்டிலும் பட்டாசு வெடிப்பது இல்லை என்று தமிழ் நாட்டில் ஒரு கிராமத்து மக்கள் முடிவெடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் சூலூர் தாலூகவில், கருமத்தம்பட்டி கிராமத்தில் உள்ள நொய்யல் பசுமை கழக தலைவர் பழனியாண்டி அவர்களின் தீவிரமான முயற்சியால் இம்முடிவு எடுக்கப்பட்டது,
தமது கிராமத்தில் உள்ள ஆலமரத்தில் ஆயிரக்கணக்கன வவ்வால்கள் இருப்பதையும், அருகாமையில் உள்ள மரங்களில் மற்ற பறவைகள் தங்கிச் செல்வதையும் பார்த்த பழனியாண்டி, அப்பறவைகளையும், வவ்வால்களையும் ஊரைவிட்டு விரட்டாமல் இருக்க, இந்த முடிவை கிராமத்து மக்களுடம் இணைந்து எடுத்துள்ளார்.
இந்த கிராமத்து பஞ்சாயத்து தலைவி ஜோதிமணி பேசும்பொழுது, ஆயிரக்கணக்கான வவ்வால்களும், பறவைகளும் நம்பிக்கையோடு எங்கள் கிராமத்தை தேர்வு செய்து தங்கியிருப்பதால், அந்த நம்பிக்கையையும், மகிழ்வையும் கெடுக்காமல் இருக்க, இந்த தீபாவளிக்குப் பட்டாசு வெடிப்பதில்லை என்று முடிவு செய்தோம் என்கிறார்.








All the contents on this site are copyrighted ©.