2012-11-09 15:48:14

தென்கிழக்கு ஆப்ரிக்காவில் கர்தினால் Filoniயின் மேய்ப்புப்பணி பயணம்


நவ.09,2012. மக்களிடம் சென்று பணியாற்றுதல், புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி என்ற இரு தூண்களும், திருஅவை என்ற உயிருள்ள உடலுக்குத் தேவையான இரு தூண்கள் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
நவம்பர் 6 இச்செவ்வாய் முதல் இச்சனிக்கிழமை முடிய தென்கிழக்கு ஆப்ரிக்காவின் Owerri பகுதியில் மேய்ப்புப்பணி பயணம் மேற்கொண்டுள்ள மறைபரப்புப்பணி திருப்பீடப் பேராயத்தின் தலைவர் கர்தினால் Fernando Filoni, இவ்வாறு கூறினார்.
தன் மேய்ப்புப்பணி பயணத்தின் ஓர் அங்கமாக, இவ்வியாழனன்று அங்கு நிகழ்ந்த ஒரு முக்கியக் கருத்தரங்கில் உரையாற்றிய கர்தினால் Filoni, கிறிஸ்தவர்கள் தங்களிடம் இல்லாததொன்றை மக்களுக்கு அளிக்க முடியாது என்று கூறினார்.
'புதிய நற்செய்திப்பணி' என்ற வார்த்தைகளை உருவாக்கிய அருளாளர் இரண்டாம் ஜான்பால், புதிய நற்செய்திப்பணியை மையப்படுத்தி அண்மையில் வத்திக்கானில் நிகழ்ந்த ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தை முன்னின்று நடத்திய திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இருவரும், நற்செய்தி உலகெங்கும் சென்றடையவேண்டும் என்பதில் காட்டிவரும் ஆர்வத்தைக் கர்தினால் Filoni தன் உரையில் எடுத்துரைத்தார்.








All the contents on this site are copyrighted ©.