2012-11-08 16:00:04

தென்னாப்பிரிக்க பணத்தில் முதல் தடவையாக மண்டேலாவின் படம்


நவ.08,2012. தென்னாப்பிரிக்காவில் முதல் முறையாக தேசத் தலைவர் நெல்சன் மண்டேலாவின் முகம் அச்சிடப்பட்ட ராண்ட் (Rand) நோட்டுக்கள் இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டுள்ளன.
அந்நாட்டின் ரிசர்வ் வங்கியின் கவர்னர் Gill Marcus, Pretoriaவில் உள்ள ஒரு சிறிய கடைக்குச் சென்று புதிய நோட்டுக்களை கொடுத்து அதன் மூலம் சில பொருட்களை வாங்கியதன் மூலம் புதிய நோட்டுக்கள் புழக்கத்துக்கு வந்தன.
இப்புதிய நோட்டுகள் மண்டேலாவிடம் காட்டப்பட்டதாகவும், அதைப் பார்த்து அவர் மகிழ்ந்ததாகவும் ரிசர்வ் வங்கி கவர்னர் Marcus தெரிவித்துள்ளார்.
முந்தையக் காலங்களில் தெருக்களுக்கும், நகரங்களுக்கும் தன் பெயர் சூட்டப்படுவது குறித்து மண்டேலா ஆர்வம் காட்டாமல் இருந்தார். அவரது அறக்கட்டளையும்கூட மண்டேலாவின் பெயர் பயன்படுத்தப்படுவது குறித்து மிகவும் கவனமாக இருந்து வருகிறது.
தன் உருவத்தை நாணயங்களில் முதலில் பதித்தவர் உரோமைய அரசனான சீசர் என்று சொல்லப்படுகிறது. தற்போது, உலகின் பல நாடுகளில் தலைவர்களின் படம் பண நோட்டுகளில் இடம்பெற்றுள்ளது.Mandela's smile now on South African currency note







All the contents on this site are copyrighted ©.