2012-11-03 15:47:07

அரசியல் நடவடிக்கை என்பது ஓர் ஒழுக்க ரீதி சார்ந்த கடமை என்கிறார் லெபனன் பேராயர்


நவ.03, 2012. அரசு நிர்வாகத்திலும் பொதுவாழ்விலும் இலஞ்ச ஊழல் பெருகிக்கிடப்பது மற்றும் தங்கள் சுயநலக்காரணங்களுக்காக அரசியலைப் பயன்படுத்துவது ஆகியவை குறித்து தன் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார் லெபனனின் மேரனைட் ரீதி முதுபெரும் தலைவர் Beshara al-Rahi.
அரசியல் நடவடிக்கை என்பது ஓர் ஒழுக்க ரீதி சார்ந்த கடமை என்பதை வலியுறுத்தியப் பேராயர், அனைத்துக் கட்சிகளிடையே பேச்சுவார்த்தைகளைத் துவங்க அரசுத்தலவர் விடுத்துள்ள அழைப்புக் குறித்து தன் மகிழ்ச்சியையும் வெளியிட்டார்.
புதிய கர்தினாலாக திருத்தந்தையால் அண்மையில் அறிவிக்கப்பட்ட பேராயர் Beshara al-Rahi, தங்கள் சுயநலக்காரணங்களுக்காக பொதுமக்களின் நலனில் அக்கறையின்றி செயல்படும் அரசு அதிகாரிகள் குறித்து தன் கண்டனத்தையும் வெளியிட்டார்.
நல்ல பொருளாதாரமற்றும் அரசியல் சூழலை உருவாக்கபேச்சுவார்த்தைகள் மூலமே முடியும் எனவும் எடுத்துரைத்தார் லெபனன் மேரனைட் முதுபெரும் தலைவர்.








All the contents on this site are copyrighted ©.