2012-11-03 15:49:25

அநீதியான முறையில் அப்பாவி ஈராக்கியர்கள் இரத்தம் சிந்துகின்றனர், : பேராயர்


நவ.03, 2012. அநீதியான முறையில் அப்பாவி ஈராக்கியர்கள் தங்கள் இரத்தத்தைச் சிந்தி வந்துள்ளது இறைவன் மீதான விசுவாசத்தைப் புதுப்பிப்பதற்கும் நம் விசுவாசம் மற்றும் நம்பிக்கையை பலப்படுத்துவதற்கும் இயைந்த முக்கிய தருணம் என்றார் ஈராக் கல்தேய ரீதி பேராயர் Louis Sako.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பாக்தாத் பேராலயத்தில் 58 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை நினைகூரும் திருப்பலியில் மறையுரையாற்றிய பேராயர் Sako, மதங்களையும் மனித குலத்தையும் அவமதிக்கும் இத்தகைய வன்முறை நடவடிக்கைகள் வன்மையாக கண்டிக்கப்படவேண்டும் என்றார்.
கிர்குக் நகரில் மட்டும் 2003ம் ஆண்டிலிருந்து 37 கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் கவலையை வெளியிட்டார் பேராயர்.
மதத்தின் பெயரால் மத வழிபாட்டுத்தலங்களும் மதநம்பிக்கையாளர்களும் தாக்கப்படுவது இறைவனுக்கு எதிரான பாவம் என மேலும் கூறினார் பேராயர் Sako.








All the contents on this site are copyrighted ©.