2012-11-02 15:21:52

கிறிஸ்தவர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் ஜெர்மனியில் அதிகரித்துள்ளது


நவ.02,2012. கிறிஸ்தவர்களுக்கு எதிராக எழுந்துள்ள பல மனித உரிமை மீறல்கள் ஜெர்மனியில் அதிகரித்துள்ளது என்று அரசு சாரா அமைப்பு ஒன்று ஐ.நா. மனித உரிமைகள் கழகத்திடம் அறிக்கையொன்று சமர்ப்பித்துள்ளது.
Observatory on Intolerance and Discrimination against Christians என்ற அமைப்பு சமர்ப்பித்துள்ள இவ்வறிக்கையில், கிறிஸ்தவர்கள் ஆறு விதங்களில் சமுதாயப் புறக்கணிப்பை எதிர்கொள்கின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.
குழந்தைகள் கல்வி, கருக்கலைப்பு, போன்ற கருத்துக்களில் அரசுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே நிலவி வரும் கருத்து வேறுபாடுகளால் இப்புறக்கணிப்பு அதிகரித்துள்ளது என்று இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
மேலும், கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களில் வெறுப்பை வெளிப்படுத்தும் வாசகங்களும், படங்களும் சுவர்களில் தோன்றி வருவதும் ஓர் ஆபத்தான போக்கு என்று கூறப்பட்டுள்ளது.மதச் சுதந்திரத்துக்கு எதிரான இத்தகைய போக்கு 2005ம் ஆண்டிலிருந்து அதிகரித்து வந்துள்ளது என்பதையும் இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.







All the contents on this site are copyrighted ©.