2012-11-02 15:09:47

Sandy சூறாவளியில் பாதிக்கப்பட்ட அமெரிக்க மக்களுக்கு கத்தோலிக்க பிறரன்புப்பணி அமைப்பின் 1,00,000 டாலர்கள் நிதி உதவி


நவ.02,2012. Knights of Columbus எனும் கத்தோலிக்க பிறரன்புப்பணி அமைப்பு Sandy சூறாவளியில் பாதிக்கப்பட்ட அமெரிக்க மக்களுக்கு 1,00,000 டாலர்கள் உடனடி நிதி உதவி செய்துள்ளது.
பேரிடர்கள் நேரத்தில் உதவுவது Knights of Columbusன் பாரம்பரியம் என்று கூறிய இவ்வமைப்பின் தலைவர் Carl Anderson, சூறாவளியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் பணியில் தங்கள் அமைப்பு தற்போது முனைப்புடன் செயல்பட்டு வருகிறது என்று கூறினார்.
அக்டோபர் 29ம் தேதி அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையைத் தாக்கிய Sandy சூறாவளியில் இதுவரை 80க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர் என்றும், 45 இலட்சம் மக்கள் இன்னும் மின் வசதி இன்றி வாழ்கின்றனர் என்றும் CNA கத்தோலிக்கச் செய்தி நிறுவனம் கூறியது.








All the contents on this site are copyrighted ©.