2012-11-01 15:37:57

மனித ஆன்மாவையும், புலன்களையும் ஒன்றிணைக்கும் ஓர் உயர்ந்த முயற்சி கலை - திருத்தந்தை


நவ.01,2012. கலை என்பது மனித முயற்சி என்றாலும், அது மனித ஆன்மாவையும், புலன்களையும் ஒன்றிணைக்கும் ஓர் உயர்ந்த முயற்சி என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
வத்திக்கானில் உள்ள உலகப் புகழ்பெற்ற Sistine சிற்றாலயத்தின் 500வது ஆண்டு நிறைவை இப்புதன் மாலை ஒரு திருவழிபாட்டு நிகழ்வுடன் கொண்டாடிய திருத்தந்தை, அவ்வாலயத்தின் புகழையும், அது எவ்விதம் மக்களை 500 ஆண்டுகளாக இறைவன் பால் ஈர்த்துவந்துள்ளது என்பதையும் எடுத்துரைத்தார்.
திருத்தந்தை இரண்டாம் ஜூலியஸ் அவர்களின் மேற்பார்வையில் உருவாக்கப்பட்ட Sistine சிற்றாலயம், 1512ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி திருத்தந்தை நிகழ்த்திய மாலை வழிபாட்டுடன் திறந்து வைக்கப்பட்டது.
இச்சிற்றாலயத்தின் கூரையில் புகழ்பெற்ற கலைஞர் மிக்கேலாஞ்சேலோவால் வரையப்பட்டுள்ள பிரம்மாண்டமான ஓவியத்தைச் சிறப்பாகக் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இந்த ஓவியத்தைக் குறித்து புகழ்ந்துள்ள ஏனைய கலைஞர்களின் கூற்றுக்களை மேற்கோள் காட்டினார்.
உலகப் புகழ்பெற்ற இவ்வோவியம் கலை உலகின் கலங்கரை விளக்காக உள்ளதென்று பிற கலைஞர்கள் கூறியிருப்பது மிகவும் பொருந்தும் என்று கூறியத் திருத்தந்தை, மிக்கேலாஞ்சலோவின் மனதில் ஒளியேற்றிய இறைவனுக்கு நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம் என்று கூறினார்.








All the contents on this site are copyrighted ©.