2012-11-01 15:40:02

திருவனந்தபுரம் லொயோலா கல்லூரியின் பொன்விழா நிகழ்ச்சியில் இந்தியக் குடியரசுத் தலைவர்


நவ.01,2012. சமுதாய மாற்றங்களைக் கொணர விழையும் மனிதர்களை உருவாக்க. சமூகவியல் துறையைத் திறம்பட நடத்திவரும் லொயோலா கல்லூரியின் பொன்விழா நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் பெருமகிழ்வடைகிறேன் என்று இந்தியக் குடியரசுத் தலைவர் Pranab Mukherjee கூறினார்.
கேரளாவின் திருவனந்தபுரத்தில் இயேசு சபையினரால் நடத்தப்பட்டு வரும் லொயோலா கல்லூரியின் ஐம்பது ஆண்டு நிகழ்வில் கலந்து கொண்டு தலைமையுற்றையாற்றிய அரசுத்தலைவர் Pranab Mukherjee இவ்வாறு கூறினார்.
கேரள இயேசு சபை மாநிலத்தின் முதல் தலைவராகப் பணியாற்றிய அருள்தந்தை Joseph Edamaram அவர்களின் கனவில் உதித்த இந்தச் சமூகவியல் கல்விக்கூடம், சமுதாயச் சிந்தனைகளில் கேரள மக்கள் வளர்வதற்குப் பெரும் உதவியாக இருந்துள்ளது என்று அரசுத்தலைவர் எடுத்துரைத்தார்.
கல்வித்தரத்தில் கேரள மாநிலம் 86 விழுக்காடு முன்னேற்றம் அடைந்திருப்பது பெருமைக்குரியது எனினும், இன்னும் இம்மாநிலத்தில் பெண்கள் பொதுவாழ்வில் பங்கேற்பது இன்றும் பின்தங்கியிருப்பதை இளையோருக்கு முன் தான் வைக்கும் ஒரு சவால் என்று குடியரசுத் தலைவர் Pranab Mukherjee கூடியிருந்த மாணவர்களுக்குக் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.