2012-10-29 15:35:16

இந்தியத் துறவு சபைகள் : துறவுற வார்த்தைப்பாடுகள் சீர்தூக்கிப் பார்க்கப்பட வேண்டும்


அக்.29,2012. இந்தியத் துறவு சபைகளின் அதிபர்கள், தங்களது துறவற அழைப்புக்குப் பிரமாணிக்கமாய் இருக்க வேண்டுமானால், தீர்மானம் எடுப்பது, வாழ்க்கைமுறை மற்றும் மறைப்பணிகளில் புது மாறுதல்களை அவர்கள் ஏற்படுத்த வேணடுமென்று, இந்தியத் துறவு சபைகளின் அதிபர்கள் மாநாட்டில் கூறப்பட்டது.
ஆந்திர மாநிலத்தின் ஹைதராபாத்தில் இஞ்ஞாயிறன்று தொடங்கியுள்ள மூன்று நாள் மாநாட்டில் பேசிய Montfort சபையின் அருள்சகோதரர் Varghese Thechanath, துறவற வாழ்வை மறைப்பணிகள் வடிவமைக்க வேண்டும் என்று கூறினார்.
“அர்ப்பண வாழ்க்கையை அதிகப் பயனுள்ள விதத்தில் வாழ்வதற்குப் புது வழிமுறைகள்” என்ற தலைப்பில் நடைபெற்றுவரும் இம்மாநாட்டில் துறவு சபைகளின் அதிபர்கள், மாநிலத் தலைவியர் என 550 பேர் கலந்து கொள்கின்றனர்.
CRI எனப்படும் இந்தியத் துறவு சபைகளின் அதிபர்கள் அவை, 334 துறவு சபைகளையும், அதிபர்கள், மாநிலத் தலைவியர் என 822 தலைவர்களையும் கொண்டுள்ளது.
இந்தியாவில் அருள் சகோதரர்கள், அருள்தந்தையர், அருள் சகோதரிகள் என ஒரு இலட்சத்து 25 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் மறைப்பணியாற்றுகின்றனர்.







All the contents on this site are copyrighted ©.