2012-10-24 15:53:45

1. புனிதர்களாக அறிவித்தத் திருச்சடங்கில் திருத்தந்தையின் மறையுரை


அக்.22,2012. “மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” என்ற நற்செய்தி வார்த்தைகள் ஏழு புனிதர்களின் வாழ்விலும் வெளிப்பட்டது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
நற்செய்திப் பரப்புப் பணியின் உலக நாள் சிறப்பிக்கப்பட்ட இஞ்ஞாயிறன்று வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் ஏழு அருளாளர்களைப் புனிதர்களாக அறிவித்தத் திருச்சடங்கை நிகழ்த்திய திருத்தந்தை, தன மறையுரையில் இவ்வாறு கூறினார்.
Jacques Berthieu, Pedro Calungsod, Giovanni Battista Piamarta, Maria del Carmelo Sallés y Barangueras, Marianne Cope, Kateri Tekakwitha, Anna Schäffer என்ற ஏழு அருளாளர்களின் வாழ்வுக் குறிப்புக்களை கூடியிருந்த 80000க்கும் அதிகமான விசுவாசிகளுக்கு நினைவுறுத்தியத் திருத்தந்தை, இப்புனிதர்கள் பல்வேறு நாடுகளைச் சார்ந்தவர்கள் என்பதையும் சுட்டிக்காட்டி, மறைபரப்புப் பணியின் உலக நாளன்று இவர்கள் புனித நிலை பெறுவது பொருத்தமானது என்பதையும் எடுத்துரைத்தார்.
தொன்றுதொட்டு திருஅவை பறைசாற்றி வரும் நற்செய்திப் பணிக்கும், தற்போது நாம் சிந்திக்கும் புதிய நற்செய்திப் பணிக்கும் இன்றைய ஏழு புனிதர்கள் சிறந்த வழிகாட்டிகளாக அமைந்துள்ளனர் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.








All the contents on this site are copyrighted ©.