2012-10-23 16:19:42

பங்களாதேஷில் ஒரு கத்தோலிக்க அருள்தந்தைக்கு விருது


அக்.23,2012. 1971ம் ஆண்டில் பங்களாதேஷ் நாடு உருவாகுவதற்குச் சிறப்புப் பணியாற்றிய அருள்தந்தை Marino Rigonக்கு விருது வழங்கி கௌரவித்துள்ளது அந்நாட்டு அரசு.
பங்களாதேஷ் அரசு வழங்கியுள்ள, “பங்களாதேஷ் விடுதலைப் போரின் சிறப்பு மற்றும் விடுதலைப் போரின் நண்பர்கள்” என்ற விருதைப் பெற்றுள்ள 61 வெளிநாட்டவரில், சவேரியன் மறைபோதகச் சபையைச் சார்ந்த அருள்தந்தை Rigonம் ஒருவர்.
டாக்காவில் இடம்பெற்ற இந்த விழாவில் பங்களாதேஷ் அரசுத்தலைவர் Zillur Rahman, பிரதமர் Sheikh Hasina ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பங்களாதேஷில் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக மறைப்பணியாற்றியுள்ள அருள்தந்தை Rigon, அந்நாட்டின் Gopalgonj லுள்ள Baniarchar கத்தோலிக்க ஆலயத்தில், 1971ம் ஆண்டின் விடுதலைப் போரில் போராடியவர்கள் மற்றும் அகதிகளுக்கு உதவியுள்ளார்.
இந்நிகழ்வில் பேசிய ஓர் இந்து விடுதலைப் போராட்ட வீரர், வெளிநாட்டவரான அருள்தந்தை Rigonனின் உயிருக்கு அச்சுறுத்தல் வந்தபோதிலும் அவர் அகதிகளுக்கு உணவும் உறைவிடமும் வழங்கி, காயம்பட்ட விடுதலைப் போராட்ட வீரர்களுக்குச் சிகிச்சை அளித்தார் என்று கூறினார்.







All the contents on this site are copyrighted ©.