2012-10-23 16:14:14

திருப்பீடப் பிரதிநிதி : சீனாவுக்கும் வத்திக்கானுக்கும் இடையே உறவு கடினமாக இருப்பதற்கு வெளியிலிருந்து வரும் சக்திகளே காரணம்


அக்.23,2012. சீனாவுக்கும் வத்திக்கானுக்கும் இடையே உறவு கடினமாக இருப்பதற்கு இவ்விரு நாடுகளின் அடிப்படையான இயல்பு காரணமல்ல, மாறாக, வெளியிலிருந்து வரும் சக்திகளே காரணம் என, தாய்வானுக்கானத் திருப்பீடப் பிரதிநிதி பேராயர் Paul Russell தெரிவித்தார்.
தாய்வானுக்கும் திருப்பீடத்துக்கும் இடையே அரசியல் உறவு உருவாக்கப்பட்டதன் 70ம் ஆண்டு நிறைவு நிகழ்வில் இவ்வாறு கூறினார் பேராயர் Russell.
தாய்பேய் அமலமரி பேராலயத்தில் இச்சனிக்கிழமையன்று இடம்பெற்ற இந்நிகழ்வில் தாய்பேய் பேராயர் John Hung, தாய்வான் அரசின் இரண்டு துணை அமைச்சர்கள், 30 குருக்கள் மற்றும் 300 விசுவாசிகள் கலந்து கொண்டனர்.
ஐரோப்பாவில் தாய்வானுடன் அரசியல் உறவைக் கொண்டுள்ள ஒரேயொரு நாடு வத்திக்கான் ஆகும். இந்த உறவை, சீனக் கம்யூனிச அரசு விரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் 1949ம் ஆண்டில் மாவ் சே துங்கின் கம்யூனிச கட்சி ஆட்சியைக் கைப்பற்றியபோது, அந்நாடு தாய்வானைத் தனது நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர விரும்பியது. அதனால் பன்னாட்டு அளவில் தாய்வானைத் தனிமைப்படுத்தவும் சீனா முயற்சித்தது என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.