2012-10-20 15:49:54

கவிதைக் கனவுகள் - அரசின் அரியணை மந்திரம்.....!


நாட்டை வேட்டையாடும் தலைவர்கள் கையில்
அம்பாய் வீசும் அரசியல் தலைகள் இதோ

உணவு துறையின் கலப்பிடம்
கழிவுப் பிணமாய் மருத்துவ
துறைக்கு அடிமையாகிறது

மருத்துவத் துறையின் முதல்
இடம் வருவாய் துறையில்
வளம் பெறுகிறது

வருவாய் துறையின் இருப்பிடம்
கல்வித் துறைக்கு காசு சேர்க்க
கட்டளையிடுகிறது

கல்வித் துறை போக்குவரத்துத் துறைக்கு
பொழுது போக்காய் மாறி
பணி துறைக்குப் பதவிப்பிரமாணமாய்
உலவுத் துறை பெயருடன்

விண் வழி துறை முதல்
தரை வழி துறை வரை
ஊழல் தாலாட்டில் உறங்கா இரவில்

கடத்தல் கட்டிலில் கணக்கு போடும்
கைபேசி தொடரில் பாடர் தாண்டியும்
பத்து பைசாவில் ஊரே சாகிறது

ஓடும் ரயிலில் வெடிக்கும்
விபத்தில் உதவும் கரங்களாய்
உதட்டில் பேசி பகட்டில்
வெளியாகும் செய்தி தாளை

நாளை துடைக்கும் குப்பை
தொட்டியில் கசக்கி எறியும்
காகித கப்பலாய் காலம் கடத்துகிறது அரசின் அரியணை மந்திரம்.....!







All the contents on this site are copyrighted ©.