2012-10-18 15:36:03

வத்திக்கான் பிரதிநிதிகள் குழு சிரியாவுக்கு வருகை தருவது அதிக நம்பிக்கை தரும் ஒரு செய்தி - Aleppo ஆர்மீனிய கத்தோலிக்கப் பேராயர்


அக்.18,2012. வத்திக்கானிலிருந்து கர்தினால்கள், ஆயர்கள் அடங்கிய ஒரு பிரதிநிதிகள் குழு சிரியாவுக்கு வருகை தருவது அதிக நம்பிக்கை தரும் ஒரு செய்தி என்று Aleppo வில் உள்ள ஆர்மீனிய கத்தோலிக்கப் பேராயர் Boutros Marayati கூறியுள்ளார்.
வத்திக்கானிலிருந்து வெளிவந்துள்ள இச்செய்தி மிகவும் சக்தி வாய்ந்த செய்தி என்று கூறிய பேராயர் Marayati, மோதல்களில் ஈடுபட்டுள்ள பல்வேறு குழுக்களுக்கிடையே ஒற்றுமையை உருவாக்க இப்பிரதிநிதிகள் குழுவின் வருகை உதவும் என்று கூறினார்.
தேவையற்ற மரணங்கள், அழிவுகள், புலம்பெயர்தல் என்ற பல பிரச்சனைகளைச் சந்தித்துள்ள Aleppo மக்கள், இப்பிரதிநிதிகளின் வருகையால் நம்பிக்கை பெறவேண்டும் என்ற தன் ஆவலை பேராயர் Marayati, Fides செய்தி நிறுவனத்திடம் வெளிப்படுத்தினார்.
அடிப்படை மனித மாண்பை வலியுறுத்தும் விழுமியங்கள் கிறிஸ்தவம், யூதம், இஸ்லாமியம் ஆகிய மதங்களில் காணப்படுவதால், நிரந்தர அமைதி இப்பகுதியில் திரும்புவதற்கு வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன என்று பேராயர் Marayati சுட்டிக்காட்டினார்.








All the contents on this site are copyrighted ©.